Home உலகம் சிங்கப்பூரில் சிறு, குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை! 

சிங்கப்பூரில் சிறு, குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை! 

521
0
SHARE
Ad

singapore_pmசிங்கப்பூர், மே 9 – சிங்கப்பூரில் சிறு மற்றும் குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தேவைக்குத் தகுந்தபடி மட்டுமே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மலேசிய முஸ்லிம் சிறு மற்றும் குறுந்தொழில் வணிக நிறுவனங்கள் (SME) மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் கூறியதாவது:-

“சிங்கப்பூருக்கு வருகை தரும் தொழிலாளர்களுக்கு போதிய தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பது அவசியமாகின்றது. தற்போது உள்ளூரில் சிறு மற்றும் குறுந்தொழில் மையங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், இத்தகைய தொழில்களை ஊக்கப்படுத்தி அவர்களின் தொழில் உற்பத்தியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவிகள் செய்யப்படும்.”

#TamilSchoolmychoice

“அரசியல் ரீதியாக, அரசு  சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சி குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. விரைவில் அதற்கான செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.