Home தொழில் நுட்பம் சாம்சங் வடிவமைப்புப் பிரிவின் தலைவர் சாங் டாங் ஹூன் ராஜினாமா!  

சாம்சங் வடிவமைப்புப் பிரிவின் தலைவர் சாங் டாங் ஹூன் ராஜினாமா!  

598
0
SHARE
Ad

samsung-chang-dong-hoonமே 12 – செல்பேசிகள் தயாரிப்பின் முன்னோடியான சாம்சங் நிறுவனத்தின் செல்பேசிகள் வடிவமைப்புப் பிரிவின் தலைவர் சாங் டாங்-ஹூன்ப, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக அப்பிரிவின் துணைத் தலைவர் லீமின் ஹ்யூக் பொறுப்பேற்றுள்ளார்.

சாம்சங்கின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமான கேலக்ஸி திறன்பேசிகளின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய சாங் டாங்கின், வடிவமைத்த கேலக்ஸி s5 திறன்பேசிகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் போனதே,அவரின் ராஜினாமாவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. மேலும், வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகளில் கேலக்ஸி s5 எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.

#TamilSchoolmychoice

சாங் டாங்-ஹூன்பயின் ராஜினாமாவிற்குப் பின் பொறுப்பேற்றுள்ள லீ, 2010-ம் ஆண்டு, கேலக்ஸி தொடர்கள் தயாரிப்பில், மிகக் குறைந்த வயதில் மூத்த நிர்வாகி என்று பெயர் பெற்றவர். சாம்சங் நிறுவனத்தின் தற்போதைய சறுக்கல்களை லீ, திறம்பட சரி செய்வார் என்று கூறப்படுகின்றது.

தற்போது கேலக்ஸி நோட் 4-களில் அதிகவனம் செலுத்தும் சாம்சங் நிறுவனம், அதன் திரை  உட்பட பல்வேறு அம்சங்களில் புதுமையை புகுத்தி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.