Home India Elections 2014 தேர்தல் விதிமீறல் – கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் விதிமீறல் – கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

556
0
SHARE
Ad

kajeerevalடெல்லி, மே 12 – பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடந்த தேர்தல் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால் இவ்வாறு பேசியது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறி இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் நாளைக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

தேர்தல் கூட்டங்களில் பேசுகையில் ஜாதி அல்லது சமூக உணவர்வுகளை தூண்டும் வகையில் பேசுவது தேர்தல் விதிமீறல் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் கூட்டத்தில் பேசியபோது எடுக்கப்பட்ட காணொலியையும் தேர்தல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளது.