Home உலகம் தமிழர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க கூடாது – இலங்கை ராணுவம் எச்சரிக்கை

தமிழர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க கூடாது – இலங்கை ராணுவம் எச்சரிக்கை

619
0
SHARE
Ad

srilankaகொழும்பு, மே 12 – இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க கூடாது என அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவான் வணிகசூர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வீட்டிற்குள் நினைவுதினத்தை அனுசரிக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையும் மீறி கறுப்புக் கொடி ஏற்றுதல், பேனர்கள் வைத்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பாயும் என்று யாழ்ப்பாணக் காவல்துறை அறிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்ததன் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் 18-ஆம் தேதி வர உள்ள நிலையில் இலங்ககை ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice