Home கலை உலகம் பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!

பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!

622
0
SHARE
Ad

varalaxmiசென்னை, மே 12 – போடா போடி படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் “மதகஜராஜா” படத்தில் நடித்தார்.

அப்படம் இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் “தாரை தப்பட்டை” படத்தில் நடிக்கிறார்.

நடனத்தில் சிறந்தவர் என்ற வகையில் முதலில் இந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றது. பின்னர் அது வரலட்சுமிக்கு மாறியது. இவரும் நடனம் கற்றுத்தேர்ந்தவர். அவரிடம் கரகாட்டத்துக்கு பயிற்சி பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்ட பாலா, அடுத்தமுறை பார்க்கும்போது உடல் எடையும் குறைக்க வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

பாலா படத்தில் வாய்ப்பு என்பது நாயகிகளுக்கு குதிரைகொம்பு. ஆகையால் ஒன்றிரண்டு மாதத்திலேயே எடையை குறைத்துக்காட்டுகிறேன் என்றார் வரலட்சுமி. பார்க்கலாம் என்று பாலா கூறியதும் வரலட்சுமி ஒல்லியாவதற்கான பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினார்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கடுமையான பயிற்சி மூலம் 10 கிலோ எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறி விட்டார் வரலட்சுமி.