Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தோனேசிய திறன்பேசியுடன் மீண்டும் களமிறங்குகிறது பிளாக் பெர்ரி!

இந்தோனேசிய திறன்பேசியுடன் மீண்டும் களமிறங்குகிறது பிளாக் பெர்ரி!

551
0
SHARE
Ad

Z3-single-device-web (1)மே 12 – பிரபல பிளாக் பெர்ரி நிறுவனம் தனது புதிய வகை குறைந்த விலை திறன்பேசியை இந்த வாரம் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Z3 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திறன்பேசி இந்தோனேசிய சந்தைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் பிற நாட்டு சந்தைகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Z3 திறன்பேசி இந்தோனேசிய சந்தையில் மாபெரும் வெற்றியடைந்து பிளாக் பெர்ரியின் மதிப்பு மீண்டும் உயரும் என்று அந்நிறுவனம் பெரிதும் நம்புகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த சில வருடங்களாக கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த பிளாக் பெர்ரி நிறுவனம் புதிய தலைமைத்துவத்தின் மூலம் ஓரளவு மாற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.