Home இந்தியா மோடி தோல்வியடைவார், அஜய் ராய் போட்டியிலேயே இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்!

மோடி தோல்வியடைவார், அஜய் ராய் போட்டியிலேயே இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்!

614
0
SHARE
Ad

kageerivaalவாரணாசி, மே 12 – வாரணாசி தொகுதியில் மோடி தோல்வியடைவார் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்  எனக்கு எதிரான போட்டியிலேயே இல்லை என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறியதாவது, எனக்கு எதிரான போட்டியிலேயே  காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கிடையாது. மோடிக்கும் எனக்கும் இடையேயாதான் வாரணாசியில் போட்டி.

இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். மோடிஜி தோல்வி அடைவார் என்றார். மேலும், வாராணாசி மக்கள் அனைவரும் வந்து வாக்களிக்கவேண்டும் என்று பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக இன்று காலை வாக்களித்த பிறகு பேட்டி அளித்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கூறும்போது, வாரணாசி மக்கள் மோடி மற்றும் கெஜ்ரிவால் போன்ற வெளிநபர்களை நிராகரிப்பார்கள். நான் தான் இந்த மண்ணின் மைந்தன் என்று தெரிவித்தார்.