Home நாடு திரெங்கானுவில் இறுதிநேர அதிரடி திருப்பம் – புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டவுட் ராஜினாமாவை...

திரெங்கானுவில் இறுதிநேர அதிரடி திருப்பம் – புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டவுட் ராஜினாமாவை வாபஸ் பெற்றார்

543
0
SHARE
Ad

rosleeகோலதிரெங்கானு, மே 13 – திரெங்கானுவில் நடைபெற்று வரும் அதிரடி அரசியல் மாற்றங்களில் இறுதி நேர திருப்பமாக, புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டவுட் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார்.

இவர் முன்பு முன்னாள் மந்திரி பெசார் அகமட் சைட்டுடன் சேர்ந்து அம்னோவிலிருந்து ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை திரெங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜிடின் ஷாஃபி உறுதிப்படுத்தினார். சக அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் மீண்டும் அம்னோவுக்குள் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த தகவலை பெர்னாமா வெளியிட்டுள்ளது.

முதலில் ரோஸ்லி டவுட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தது பற்றி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை, இனிமேல் மாநிலத்தில் அரசியல் நிலைமைகள் சீராக இயங்க முடியும் என்றும் முகமட் ஜிடின் தெரிவித்துள்ளார்.

ரோஸ்லி டவுட் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திரெங்கானு சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் பலம் மீண்டும் 16ஆக உயர்ந்துள்ளது.
சபாநாயகரின் வாக்கையும் சேர்த்தால் தற்போது தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 16ஆக உயர்ந்துள்ளது.

எஞ்சிய 14 தொகுதிகளை பாஸ் வைத்திருக்கும் வேளையில், பிகேஆர் 1 தொகுதியையும், சுயேச்சைகள் இரண்டு தொகுதிகளையும் வைத்திருக்கின்றார்கள்.

ஆக, இரண்டு தரப்புகளும் 16:16 என்ற அளவில் தற்போது சரிசமமாக இருக்கின்றார்கள்.
இதனால், திரெங்கானு சட்டமன்றப் பிரச்சனை இன்னும் தீர்ந்ததாகக் கொள்ள முடியாது.

கடந்த ஓரிரு நாட்கள் திரெங்கானுவில் நடந்த அரசியல் மாற்றங்கள் நிச்சயம் பிரதமர் நஜிப்புக்கு பெரும் தலைவலியையும், தூக்கமில்லா இரவுகளையும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.