Home உலகம் ஆப்கன் அதிபர் தேர்தல்: திடீர் திருப்பமாக வேட்பாளர் ரசூல் விலகல்!

ஆப்கன் அதிபர் தேர்தல்: திடீர் திருப்பமாக வேட்பாளர் ரசூல் விலகல்!

502
0
SHARE
Ad

AFGHANISTANELECTIONகாபூல், மே 14 – ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் 5-ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆப்கனிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அஷ்ரப் கனி மற்றும் அதிபர் ஹமீது கர்ஸாயின் ஆதரவு பெற்ற வேட்பாளரான சல்மாயி ரசூல் ஆகியோர் போட்டியிட்டனர்.

முதல் கட்டத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், போட்டி வேட்பாளரான சல்மாயி ரசூல் போட்டியிலிருந்து விலகிவதாகவும், முதல் கட்டத் தேர்தலில் முன்னணி வகிக்கும் அப்துல்லா அப்துல்லாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அப்துல்லா அப்துல்லாவுக்கும், அஷ்ரஃப் கனிக்கும் இடையே நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் அப்துல்லாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

முதல் கட்டத் தேர்தலில் அப்துல்லா 44.9 சதவிகித வாக்குகளையும், கனி 31.5 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.