Home உலகம் கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

408
0
SHARE
Ad

chaneasefastrainநைரோபி, மே 14 – கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான புதிய ரயில்பாதைத் திட்டத்தினை சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் லீ கி குயாங்குடன் கென்யா, உகாண்டா, ருவாண்டா, தெற்கு சூடான் தலைவர்களும், தான்சானியா, புருண்டி நாடுகளின் பிரதிநிதிகளும், ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிக்கான அடிக்கல்லை சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கென்யாவின் அதிபர் உரு கென்யாட்டா மொம்பாசா நகரில் நாட்டினார். இந்த ரயில்வே திட்டமானது முதலில் மொம்பாசாவிலிருந்து நைரோபி வரை அமைக்கப்பட்டு பின்னர் உகாண்டா, ருவாண்டா, புருண்டி மற்றும் தெற்கு சூடான் வரை விஸ்தரிக்கப்படும். இதன் முதல் கட்டத்தில் 90 சதவிகிதம் வரை நிதியுதவி அளிக்கும் சீன அரசு, அந்நாட்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிகளுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது.

தண்டவாளப் பணிகள் வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும், கடற்கரையிலிருந்து நைரோபி வரையிலான 610 கி.மீ நீள ரயில்பாதை வரும் 2018-ம் ஆண்டிற்குள் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் புதிய ரயில்பாதை செயல்படத் துவங்கும்போது பொதுமக்களின் போக்குவரத்துச் செலவினங்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறையும் என்று கென்யாவின் அதிபர் உரு கென்யாட்டா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய ரயில் பாதை திட்டம் குறித்து சீனப் பிரதமர் லீ கி குயாங் கூறுகையில், “சீனா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே காணப்படும் சம ஒத்துழைப்பும், பரஸ்பர நன்மையையும் இந்தத் திட்டத்தின்மூலம் வெளிப்படும்.அதுமட்டுமின்றி, ரயில் போக்குவரத்து கட்டமைப்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.