Home இந்தியா ஐ.பி.எல். 7: கொல்கத்தா 5–வது வெற்றி – மும்பை அணி வெளியேறுகிறது!

ஐ.பி.எல். 7: கொல்கத்தா 5–வது வெற்றி – மும்பை அணி வெளியேறுகிறது!

508
0
SHARE
Ad

ipllகட்டாக், மே 15 – ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பையை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி 5–வது வெற்றியை பதிவு செய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கட்டாக் மைதானத்தில் அரங்கேறிய 40–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் திரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

#TamilSchoolmychoice

10–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 5–வது வெற்றியாகும். அதே சமயம் 10–வது போட்டியில் களம் கண்ட நடப்பு சாம்பியன் மும்பைக்கு இது 7–வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணியின் பிளே–ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.