Home இந்தியா அணுமின் நிலையத்தில் தரமில்லாத பாகங்களால் விபத்து – உதயகுமார் குற்றச்சாட்டு

அணுமின் நிலையத்தில் தரமில்லாத பாகங்களால் விபத்து – உதயகுமார் குற்றச்சாட்டு

517
0
SHARE
Ad

TH03_KUDANKULAM_1164176fசென்னை, மே 15 – நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று பழுது பார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொதி நீர் வெளியேறியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இவ்விபத்து குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மின் உற்பத்தியானது 900 மெகாவாட்டை எட்டியுள்ளது. அணு உலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று காலை முதலாவது அணு உலையில் திடீரென வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்தது. அணு உலையில் நீராவியை வெப்ப ஆற்றலாக மாற்றும் இயந்திரத்தில் வால்வு பழுதாகி இருந்தது. நேற்று அதை சரி செய்யும் பணி நடைபெற்றது. 6  ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். வால்வை மாற்றும் போது திடீர் என்று அதில் இருந்து கொதிநீர் வெளியேறியது.

6 பேர் மீதும் கொதிநீர் சிதறி விழுந்தது. இதனால் அவர்களது முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், அணு மின்நிலைய ஊழியர் குடியிருப்பில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் குழாயில் இருந்து சிதறி வெளியேறிய கொதிநீர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணுமின் நிலைய மீது சிதறியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் கூடங்குளம் போலீசார் அணுமின் நிலையத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூடங்குளம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளருமான உதயகுமார் “அணுமின் நிலையத்தில் பாகங்கள் தரமில்லாததே விபத்துக்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கு அரசோ, அணுசக்தி கழகமோ இன்னும் பொறுப்பேற்கவில்லை என்றும் விபத்து குறித்து எத்தரப்பையும் சாராத விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும், அணுமின் நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.