Home கலை உலகம் திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது – விஜய் எதிர்ப்பால் அமலாபால் அதிர்ச்சி!

திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது – விஜய் எதிர்ப்பால் அமலாபால் அதிர்ச்சி!

644
0
SHARE
Ad

Amala-Paulசென்னை, மே 15 – திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று இயக்குனரும், அமலா பாலின் காதலருமான விஜய் கட்டளையிட்டதால் அதிர்ச்சியடைந்தார் அமலாபால்.

இயக்குனர் விஜய், அமலா பால் காதல் விவகாரம் வெளியானதிலிருந்து அமலா பாலுக்கு பட வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தெலுங்கில் ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதையறிந்து கோபமடைந்த அமலா பால், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் ஆனதும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட வேண்டுமா? விஜய்யும், நானும் சினிமாவை நேசிக்கிறோம். தொடர்ந்து நடிப்பதற்கு அவர் அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக மிலி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நடிக்க அமலா பால் எடுத்த முடிவு இரு குடும்பத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று பெரியவர்களும், விஜய்யும் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால், ஒரே இரவில் தனது முடிவிலிருந்து பின்வாங்கினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘திருமணத்துக்கு பிறகு நடிக்கும் திட்டம் இல்லை. குடும்பத்துக்குத்தான் முதல் முக்கியத்துவம். திருமணத்துக்கு பிறகு நடிக்க வாய்ப்பு வந்தால் அதுபற்றி அப்போது முடிவு செய்வேன். திருமண நாளை எண்ணி நான் பரவசத்தில் இருக்கிறேன். இப்போதுள்ள வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முடிவில் குழப்பம் எதுவும் இல்லை.

திருமணம் செய்துகொள் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. மனப்பூர்வமாகவே எனது திருமணம்பற்றி நான் முடிவு செய்தேன். ‘மிலி மலையாள படத்தில் தற்போது நடிக்கிறேன். புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என அமலா பால் கூறினார்.

அமலாபால் மீண்டும் நடிக்கும் முடிவு எடுத்தது பற்றியும் அதை தான் தடுத்தது பற்றியும் விஜய் கூறும்போது, ‘திருமணத்துக்கு பிறகு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது அமலா பாலுக்கு நன்றாகவே தெரியும். இந்த சந்தோஷமான வேலையில் எல்லோருடைய ஆசீர்வாதம் மட்டுமே எங்களுக்கு தேவை. இதற்கு மேல் இதுபற்றி எந்த மாறுபட்ட தகவல்களுக்கும் இடமில்லை என்றார் இயக்குனர் விஜய்.