Home வணிகம்/தொழில் நுட்பம் MH370 எதிரொலி: விமான கண்காணிப்பு சேவை வழங்க நிறுவனங்கள் போட்டி!

MH370 எதிரொலி: விமான கண்காணிப்பு சேவை வழங்க நிறுவனங்கள் போட்டி!

475
0
SHARE
Ad

mh370நியூயார்க், மே 15 – மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து உலக அளவில் விமானங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு விமானத்தில் செயற்கைக் கோள் மற்றும் வைஃபை (WIFI)சேவைகளை வழங்கி புதிய சந்தை லாபத்தை உருவாக்கிவருகின்றன.

அதற்கு ஏற்றார் போல், ஐக்கிய நாட்டு விமானப்போக்குவரத்து இலாகாவும், இது போன்று விமானங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

அதோடு, விமானத்தைக் கண்காணிக்கும் சேவைகளை அவசியமாக்குவது குறித்து யோசித்து வருகின்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

மாயமான மாஸ் விமானம் குறித்து கருத்துரைத்த மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக், உலக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்திற்கும் MH370 ஒரு பாடம் என்று கூறியிருப்பது மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

விமானங்களில் நேரடி கண்காணிப்பு சேவைகளை இணைக்க வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தி இந்த விவகாரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

இதன் காரணமாக இந்த நேரடி இணைய சேவையை வழங்கும் இம்மார்சட் மற்றும் இரிடியும் கம்யூனிகேஷன்ஸ் என்ற இரு நிறுவனங்களுக்கும் பல பில்லியன் டாலர்கள் வரை சந்தை வர்த்தகம் உருவாகலாம் என்றும் கூறப்படுகின்றது.