Home உலகம் உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில், முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில், முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!

1076
0
SHARE
Ad

mukesh-ambani-home_நியூயார்க், மே 15 – உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான ‘அண்டிலியா’ வின் பெயரை சூட்டியுள்ளார்.

இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என ‘போர்ப்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. இதன் மலேசிய மதிப்பு 65,000,00 மில்லியன். 27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.