கோலாலம்பூர், மே 16 – மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முதல் காலாண்டில் 443 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி அகமட் ஜவ்ஹாரி நேற்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி 239 பயணிகளுடன் காணாமல் போன MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற கணிப்பில், அனைத்துலக தேடும் படலம் நடைபெற்றது.இதற்காக அமெரிக்க டாலர் கணக்கில் பில்லியன் கணக்கில் செலவிடப்பட்டன.
எனினும் இன்று வரை விமானத்தின் தடயமாக ஒரு சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், மாஸ் நிறுவனத்திற்கு மார்ச் 31 – ம் தேதியோடு அதாவது முதல் காலாண்டில் 443 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதே நிலையில், கடந்த ஆண்டு இழப்பு 279 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.