குர்தாஸ்பூர், பஞ்சாப், மே 16 – ஒரு காலத்தில் அமிதாப் பச்சனுக்கு நிகரான புகழோடு இந்திப் படவுலகில் வலம் வந்தவர் இந்தி நடிகர் வினோத் கன்னா.
பின்னர், புகழின் உச்சியில் இருக்கும்போதே இந்திப் படவுலகை விட்டு விலகி அமெரிக்கா சென்று, ஆன்மீகவாதி ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தார்.
பின்னர், ஓஷோவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் இந்திப் படவுலகிற்குத் திரும்பி பல இந்திப் படங்களில் நடித்தார்.
பின்னர் பாஜகவின் வழி அரசியலில் குதித்தார்.
இந்த முறை பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோத் கன்னா வெற்றி பெற்றிருக்கின்றார்.