Home India Elections 2014 நட்சத்திர வேட்பாளர்கள் # 4 : பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் இந்தி நடிகர்...

நட்சத்திர வேட்பாளர்கள் # 4 : பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் இந்தி நடிகர் சத்ருக்கன் சின்ஹா வெற்றி!

553
0
SHARE
Ad

shatrughan-sinhaபாட்னா (பீகார்), மே 16 – பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்துருக்கன் சின்ஹா கம்பீரமான வில்லனாக இந்திப் படவுலகை ஒரு காலத்தில் கலக்கியவர்.

இன்று, அவரது மகள் சோனாக்‌ஷி சின்ஹா முன்னணி இந்தி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார்.

ரஜினிகாந்தின் புதிய படமான லிங்காவில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருப்பவரும் இதே சோனாக்ஷி சின்ஹாதான்.

#TamilSchoolmychoice

நீண்ட காலமாக பாஜகவின் வழி அரசியலில் ஈடுபட்டு வரும் சத்துருக்கன் சின்ஹா பீகார் மாநிலத்தின் பாட்னா சாஹிப் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்டார்.

மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் சத்துருக்கன் சின்ஹா தனது தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றார்.