Home India Elections 2014 சீமந்திராவில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகின்றார்.

சீமந்திராவில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகின்றார்.

573
0
SHARE
Ad

Chandrababu-Naidu-196ஹைதராபாத், மே 16 – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக முன்பு ஒரு தவணை பணியாற்றி அந்த மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி, முதன்மை மாநிலங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்டியவர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர மக்களின் தெய்வக் கடவுள் நடிகரான பிரபல நடிகர் அமரர் என்.டி.இராமராவ் தெலுகு தேசம் என்ற பெயரில் கட்சி தொடங்கி ஆந்திர மாநில ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னணியில் அவரது மூளையாகச் செயல்பட்டு அரசியலிலும் பிரவேசம் செய்தவர் சந்திரபாபு நாயுடு,

ஆனால், பின்னர் தனது மாமனார் ராமராவையே கவிழ்த்து ஆந்திர மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தவர்.

#TamilSchoolmychoice

ஆனால், போன சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி கண்டார்.

இப்போதோ, ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து விட்ட நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட  தெலுங்கானா மாநிலத்தில் பெரும்பான்மையான சட்டமன்றங்களைக் கைப்பற்றி சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் மற்ற பகுதி தற்போது சீமந்திரா மாநிலம் என அழைக்கப்படுகின்றது.

இந்த மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் வழி, மீண்டும் அந்த மாநிலத்தின் முதல்வராகின்றார்.

மாநிலம் ஏறத்தாழ பாதியாகிவிட்டதால், சிறிய மாநிலத்தை மேலும் சிறப்புடன் நிர்வகித்து மீண்டும் சீமந்திரா மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ஆந்திர மக்களிடையே கூடியிருக்கின்றது.

மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் பாஜக கூட்டணியில் இருப்பதால் சந்திரபாபு நாயுடு மேலும் பல நல்ல வாய்ப்புகளை மத்தியில் உருவாக்கி சிறந்த ஆட்சியை சீமந்திராவில் வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.