Home நாடு மலேசியகினி மீது அம்னோ, பிரதமர் நஜீப் மான நஷ்ட வழக்கு!

மலேசியகினி மீது அம்னோ, பிரதமர் நஜீப் மான நஷ்ட வழக்கு!

581
0
SHARE
Ad

najib12கோலாலம்பூர், மே 17-  பிரபல இணைய செய்தித்தளமான மலேசியகினி மீது அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள் தொடர்பாக அம்னோவும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் மான நஷ்ட வழக்கு தொடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

மலேசிய கினியின் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் அதன் ஆசிரியர் பார்த்தி ஹரிஸ் ஒமார் ஆகிய இருவரிடமும் அந்தத் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை திரெங்கானு சட்டமன்ற அரசியல் பிரச்சினை தொடர்பாக மலேசியகினி இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது. ‘தான் விதைத்ததை பிரதமர் இப்போது அறுவடை செய்கிறார்’ என்ற தலைப்பிலும், ‘திரெங்கானுவை தக்கவைத்துக் கொள்ள நஜிப் எவ்வளவு செலவழிக்கிறார்’ என்ற தலைப்பிலும் அந்த இரண்டு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

அந்த இரண்டு கட்டுரைகளிலும் அம்னோவையும் நஜிப்பையும் அவமதிக்கும் வகையில் பல வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறி அவர்களின் வழக்கறிஞர் மலேசியகினியின் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த கட்டுரைகள் அம்னோவும் நஜிப்பும் அரசியலில் நாணயம் இல்லாதவர்கள், முறை தவறி நடப்பவர்கள் என்ற பொருள்படுவதாக அவர்களின் வழக்கறிஞர் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்னோவும் நஜிப்பும் இனவாதிகள், ஊழல்வாதிகள், ஒழுக்கமில்லாதவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்ற பொருளிலும் அந்தக் கட்டுரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரைகளினால் தங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மலேசிய கினி எந்தக் கட்டுபாடும் இல்லாத மன்னிப்பு ஒன்றை பிரசுரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இல்லாவிட்டால் மலேசியகினி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.