Home India Elections 2014 மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்கிறேன் -வைகோ கருத்து

மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்கிறேன் -வைகோ கருத்து

560
0
SHARE
Ad

vaiko6விருதுநகர், மே 17 – நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற்றாலும் இதற்கு மக்கள் எனக்கும் கட்சிக்கும் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்  என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய அளவில் மோடி பேரலை பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பா.ஜ. தனிப்பெரும்பான்மை பெறும் அளவில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தேர்தலில் பிரதமர் பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பது தான் ஜனநாயகம். ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும் தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதி கொண்டு ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.