புதுடில்லி, மே 17 – நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் அனைத்து 543 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
அதன்படி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மொத்தம் 335 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
(வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மாலையிட்டு வாழ்த்து தெரிவிக்கும் காட்சி)
பாஜக மட்டும் தனியாக 282 தொகுதிகள் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்தியப் பொதுத் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது இதுதான் முதல் முறையாகும்.
காங்கிரஸ் கூட்டணி வெறும் 60 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் தனியாக 44 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த இரண்டு கூட்டணிகளிலும் இல்லாத மற்ற கட்சிகள் மொத்தம் 148 தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 37 தொகுதிகளையும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளையும் வென்றுள்ளது.
படம்: EPA