Home உலகம் தென் சீனக் கடலில் தாய்லாந்து – அமெரிக்க இராணுவத்தால் மாஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்!

தென் சீனக் கடலில் தாய்லாந்து – அமெரிக்க இராணுவத்தால் மாஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்!

494
0
SHARE
Ad

mh370சிட்னி, மே 19 – மலேசிய விமானம் MH370 மாயமாகி 10 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக தேடுதல் வேட்டையில் அதைப் பற்றிய சிறு தடையம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று காணாமல் போன விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று கூறும் முதல் புத்தகம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புத்தகத்தில் விமானம் பற்றிய எந்த முடிவும் கூறப்படவில்லை என்றும், மாறாக தென் சீன கடலில் அருகே தாய்லாந்து – அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சியின் போது, விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் சம்பவத்தை மூடி மறைக்க தவறான பகுதியில் தேடுதல் பணியை ஏற்படுத்தி மூடி மறைத்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அப்புத்தகம் கூறுகின்றது.

இந்த புத்தகத்தை எழுதிய பத்திரிக்கையாளர் நைகெல் காவ்தோர்ன், இந்த சம்பவம் ஏற்பட்ட முதல் நாள் தொடங்கி நிகழ்வுகள், மக்களின் உணர்வுகள், அனைத்துலக தேடுதல் பணிக்காக கூறப்பட்ட தியரிகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.