Home இந்தியா ஐபிஎல்7 : டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்!

ஐபிஎல்7 : டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்!

512
0
SHARE
Ad

ipl7(6) டெல்லி, மே 20 – டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

iplடெல்லி அணியில் அதிகபட்சமாக திணேஷ் கார்த்திக் 69 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.