Home இந்தியா ஐபிஎல் 7: பெங்களூர் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

ஐபிஎல் 7: பெங்களூர் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

574
0
SHARE
Ad

iplஐதராபாத், மே 21 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது.

ipl7பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5வது வெற்றியை பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, 4-வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.