Home கலை உலகம் அஜீத்தை கோபப்படுத்திய அனுஷ்கா!

அஜீத்தை கோபப்படுத்திய அனுஷ்கா!

654
0
SHARE
Ad

ajithசென்னை, மே 21 – ‘தல 55’ படத்தில் நடிக்கும் அனுஷ்காவின் கால்ஷீட் பிரச்சனை அஜீத்தை கோபப்படுத்தி, எரிச்சலடைய வைத்துள்ளதாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் ‘தல 55’ என்ற படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என்று இரண்டு நாயகிகள் உள்ளனர்.

அதில் அனுஷ்கா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுஷ்காவால் பட வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மா தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் அஜீத் படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் 2 பெரிய படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அஜீத், அனுஷ்கா வரும் காதல் காட்சிகள் ரகசிய இடத்தில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அனுஷ்காவின் கால்ஷீட் சொதப்பலால் அஜீத்தின் படப்பிடிப்பு அண்மையில் பாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால் அஜீத் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அவர் கௌதம் மேனனை அணுகி பிரச்சனையை தீர்க்குமாறு தெரிவித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்திலும் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அந்த படத்திற்கு இன்னும் அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.