முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய சிம்மொன்ஸ் ஐ.பி.எல். தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். சிம்மொன்ஸ் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர், உள்பட 100 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த தொடரில் அடிக்கப்படும் முதலாவது சதம் இதுவாகும்.