கோலாலம்பூர், மே 22 – உலகில் வணிக விவகாரங்களில் அதிக போட்டித் தன்மை வாய்ந்த நாடுகளில் 12 ஆவது இடத்தை மலேசியா பெற்றுள்ளது. இது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த முறை 15ஆவது இடத்திலிருந்த மலேசியா தற்போது முன்னேறி 12ஆவது இடத்தை அடைந்துள்ளது.
வணிக விவகாரங்களில் ஒரு நாட்டின் பொருளாதார சாதனை, அரசாங்கத்தின் செயல் திறன், வணிகத்திறன், உட்கட்டமைப்பு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
60 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மலேசியாவிற்கு 12 ஆவது இடம் கிடைத்துள்ளது.
இந்த வரிசையில் முதலாவது நாடாக அமெரிக்காவும், இரண்டாவது நிலையில் சுவிட்சர்லாந்தும் சிங்கப்பூரும் இடம் பெற்றுள்ளன.
கடந்தாண்டு ஆய்வில் 5 ஆவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் இவ்வாண்டு 2ஆவது இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடுகளில் இந்தோனேசியா 37-வது இடத்தையும் தாய்லாந்து 29 -வது இடத்தையும் பிடித்துள்ளது. பொருளாதாரம் பலம் பொருந்திய சில நாடுகளை விட மலேசிய சிறப்பான இடத்தில் இருக்கின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக பிரிட்டன் 16-வது இடத்திலும் ஆஸ்திரேலியா 17-வது இடத்திலும் நியூசிலாந்து 20-வது இடத்திலும் ஜப்பான் 21-வது இடத்திலும் சீனா 23-வது இடத்திலும் இருக்கின்றன. ஆனால்,மலேசியா 12-வது இடத்தை பிடித்திருக்கிறது.