Home உலகம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்!

483
0
SHARE
Ad

AFGHANISTAN-UNREST-USஆப்கானிஸ்தான், மே 23 – ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தூதரக அலுவலர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 பேரில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதாகவும்  தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.