Home இந்தியா ஐபிஎல்7: சென்னையை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல்7: சென்னையை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி!

422
0
SHARE
Ad

ipl7ராஞ்சி, மே 23 – ராஞ்சியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

ipllசென்னை அணியில் டோனி, டேவிட் ஹஸ்ஸி ஆகிய இருவரும் சிற்பபாக ஆடி அரை சதம் அடித்து அசத்தினர். டோனி 57, டேவிட்ஹஸ்ஸி 50, ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

iplதவான் 64 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார். இறுதியாக ஆடிய டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.