Home கலை உலகம் ஆபாச பட விவகாரம்: சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகினர் எதிர்ப்பு!

ஆபாச பட விவகாரம்: சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகினர் எதிர்ப்பு!

854
0
SHARE
Ad

shruti_hassanசென்னை, மே 24 – சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆபாச படங்களை இணையத்தளத்தில் பரப்பியதாக படக்குழுவினர் மீது போலீசில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்துள்ளனர் சுருதிஹாசன்.

இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு ‘ஏவடு’ படத்தில் அவர் ஆபாசமாக நடனம் ஆடிய படங்கள் இணையத்தளத்தில் வெளியாயின.

அரை குறை ஆடையில் சுருதிஹாசன் அப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. இது சுருதிஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவை தொடர்பு கொண்டு பேசினார்.

#TamilSchoolmychoice

அவரோ ஆபாச படங்கள் எப்படி வெளியானது என்று தனக்கு தெரியாது என கை விரித்து விட்டார். இதையடுத்து போலீசில் புகார் அளித்தார். ஆபாச படங்களை வெளியிட்டவர்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளில் புகைப்படம் எடுக்கும் பத்து புகைப்படக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தெலுங்கு பட உலகினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுருதிஹாசன் ஏற்கனவே நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்றும், அந்த படங்களும் இணையத்தளத்தில் பரவியுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சுருதிஹாசன் புகார் அளித்துள்ளது தேவையற்றது என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.