Home இந்தியா ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!

ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!

536
0
SHARE
Ad

ipl77மொகாலி, மே 24 – மொகாலியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷான்மார்ஷ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

iplஇதனை அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.