Home கலை உலகம் சிம்புவிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் பாண்டிராஜ்!

சிம்புவிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் பாண்டிராஜ்!

588
0
SHARE
Ad

simbu_சென்னை, மே 24 – சிம்பு, நயன்தாராவை வைத்து “இது நம்ம ஆளு” படத்தை இயக்க ஆரம்பித்த இயக்குநர் பாண்டிராஜ் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

அந்தப் படத்துக்கு பாண்டிராஜ் இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. சிம்புவுக்கு முன்பணம் கொடுத்தது முதல் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கி அந்தப் படத்தின் தயாரிப்புக்கு செலவு செய்திருக்கிறார் பாண்டிராஜ்.

அதன் பிறகு தேவைப்பட்ட பணத்தைப் புரட்ட அவர் சிரமப்பட்டதைக் கேள்விப்பட்ட சிம்பு, அந்தப் படத்தின் கதையின் மீதுள்ள நம்பிக்கையினால் தானும் ஒரு தயாரிப்பாளராக சேர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

நயன்தாரா மீண்டும் தன்னுடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சிம்பு, நல்லபிள்ளையாய் “இது நம்ம ஆளு” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். சிம்புவின் சொந்தப்படம் என்பது மற்றொரு காரணம்.

எல்லாம் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென சிம்பு முரண்டு பிடிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. வந்தாலும் தனது அறைக்குள் புகுந்துகொண்டு மணிக்கணக்கில் வெளியே வருவதில்லை என்று சேட்டையை ஆரம்பித்த சிம்பு, ஒரு கட்டத்தில் “இது நம்ம ஆளு” படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை ரத்து செய்துவிட்டு, லண்டன், பெங்களுரு என்று கிளம்பிவிட்டார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாண்டிராஜ், இந்தப் படத்தையே நிறுத்தி விடலாம். நான் செலவு பண்ணின ஒன்றரை கோடி பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுங்க என்று டி.ராஜேந்தரிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் இயக்குநர் பாண்டிராஜ்.