Home நாடு “பிகேஆரை அழித்துவிடாதீர்கள்” – அன்வார் எச்சரிக்கை

“பிகேஆரை அழித்துவிடாதீர்கள்” – அன்வார் எச்சரிக்கை

562
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01கோலாலம்பூர், மே 24 – கட்சியை மிரட்டலுக்குள்ளாக்கும் நிலையில் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஸ்மின் அலி, டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம், டத்தோ சைபுதின் நதியனுக்கு இடையிலான போட்டித் தகராற்றை அம்னோவும் டிவி 3ம் பயன்படுத்திக் கொள்வதாக அன்வார் கூறினார்.”துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அதிகார ஆசைக்காக கட்சியைப் பாழ்படுத்த வேண்டுமா?” என அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணைத் தலைவர் போட்டியில் நடப்பு உதவித் தலைவர் அஸ்மின் காலிட், சைபுதினைவிட முன்னணியில் இருக்கிறார். ஒழுங்கு நடவடிக்கையை இந்த மூன்று தலைவர்களும் எதிர்நோக்கினால் தாம் அவர்களை தற்காக்கப் போவதில்லை என்றும் அன்வார் கூறினார். அவர்கள் நீக்கப்பட்டாலும் தாம் தற்காக்கப் போவதில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் உள்ள மெர்சண்ட் ஸ்குவேரில் பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோது அன்வார் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இதனிடையே தேர்தல் குறைபாடுகள் குறித்து வெளிப்படையாக குறை கூறிய சேகுபார்ட் என அழைக்கப்படும்  பாட் – ருன் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை  என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தங்களது அகப்பக்கங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அன்வார், “சேகுபாட்டிற்கு சொந்த காரணங்கள் உள்ளன. நாங்கள் முதலில் விசாரிப்போம். அவரை நீக்கினாலோ, இடைநீக்கம் செய்தாலோ பின்னர் எந்தவொரு விசாரணையும் இருக்காது” என்றும் அன்வார் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு ஒழுங்கு நடவடிக்கை குழு  நான்கு உறுப்பினர்களை   நீக்கியது. மற்றும் 11 பேரை இடைநீக்கம் செய்தது.

செலயாங் ராடின் ஷரிபுதின் முகமது யாசின், அலோர்ஸ்டார் ஆர்.குமரகுரு, உலுசிலாங்கூர் சூல்கிப்ளி அப்துல்லா, செத்தியாவங்சா அகமட் ஜூப்லிஸ் பைசா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

வாக்களிப்பு மையங்களில் அத்துமீறி நுழைதல், வேட்பாளர்களை வெளிப்படையாக குறைகூறுதல், தேர்தல் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் செயல்படச் செய்தல் போன்ற குற்றங்களுக்காக 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இனானாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரோலண்ட் சியா மீதும் விசாரணை நடத்தப்படும் என்று புகார் குழுத் தலைவர் அப்துல் மாலிக் ஹசான் கூறினார். சியாவுக்கு எதிராக புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.பாதுகாப்பு கொடுக்காத தொகுதி தேர்தலும்  நிறுத்தி வைக்கப்படுமென அவர் சொன்னார்.