Home தொழில் நுட்பம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கும் டேப்லெட்களின் உற்பத்தியில் கூகுள்!   

முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கும் டேப்லெட்களின் உற்பத்தியில் கூகுள்!   

538
0
SHARE
Ad

googleமே 24 – கூகுள் நிறுவனம், முப்பரிமாணத்தில் புகைப்படங்களை எடுக்கும் டேப்லெட்களின் முன்மாதிரிகளை, அடுத்தமாதம் அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், “கூகுள் நிறுவனம், முப்பரிமாணத்தில் புகைப்படங்களை எடுக்கும் 7-அங்குல அளவு கொண்ட டேப்லெட்களை உருவாக்கி வருகின்றது. அந்நிறுவனம் சுமார் 4000 முன்மாதிரிகள், அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கின்றன. அது பெரும் வரவேற்பினை வைத்து அதன் உற்பத்தி இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின், டேங்கோ திட்டப் பிரிவின் கீழ் உருவாகிவரும், இந்தப் புதிய டேப்லெட்களின் பின் பகுதிகளில், இரண்டு காமெராக்களும், அகச்சிவப்பு உணர்த்திகளும் உள்ளன. இவை முப்பரிமாணத்தில் படங்களை எடுக்க உதவும். மேலும், இதில் மேம்படுத்தப்பட்டுள்ள நவீன மென்பொருள் படங்களின் தரத்தை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முப்பரிமாண சாதனங்களை உருவாக்கும் நோக்குடன் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.