பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்று அவர் குஜராத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மோடி பதவியேற்பு விழாவில் அவரது மனைவிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“இன்னும் நாங்கள் கணவன் மனைவிதான்”
குஜராத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், “மோடி, தன்னை மனைவியாக வேட்பு மனுவில் குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தாலும், அவர் என்னை மறக்கவில்லை என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்” என்றும் யசோதாபென் கூறியுள்ளார்.
“அவர் என்னை மனைவி என்று இதுவரை குறிப்பிட்டதில்லையே தவிர, அவர் தனது திருமணத்தை ஒரு நாளும் மறைக்கவில்லை. என்னைப் பற்றி அவர் தவறாகப் பேசியதும் கிடையாது. நானும் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்” என்றும் யசோதாபென் தெரிவித்துள்ளார்.
“மேலும், நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக குடும்பத்தை துறந்துவிட்டு எங்களை பிரிந்து சென்றுவிட்டார். ஒரு வேளை காலம் மாறினால் நாங்கள் மீண்டும் இணைவோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசியலால் குடும்பத்தைத் துறந்த மோடி
அவரது வீட்டுத் திருமணங்களில் கூட அவர் கலந்து கொண்டதில்லை.
அவரது மனைவி யசோதா பென், தனது தந்தையின் வீட்டில் வசித்தபடி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, தனது வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு, குஜராத்தில் உள்ள தனது சகோதரர்களின் குடும்பத்துடன் தற்போது வசித்து வரும் யசோதா பென்,
நரேந்திர மோடி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அவர் பிரதமர் ஆவதை பார்க்க ஆவலோடு காத்து இருப்பதாகவும், அதுவரை அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை, காலணிகள் அணிவது இல்லை என்று உறுதி பூண்டு இருப்பதாகவும் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
கடைசியாகப் பேசியது எப்போது?
கணவருடன் கடைசியாக எப்போது பேசினீர்கள் என்ற கேள்விக்கு, “1987-ம் ஆண்டு அவருடன் பேசினேன். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையில், நானும் அவருடன் சேர்ந்து சிரமப்பட வேண்டாம் என்று அவர் கருதினார்” என்று யசோதா பதில் அளித்தார்.
தன்னுடன் வந்து தங்கிக் கொள்ளும்படி உங்கள் கணவர் அழைத்தால், நீங்கள் போவீர்களா? என்ற நிருபரின் கேட்டபோது, சற்றும் தாமதிக்காமல், ‘அவர் கேட்டுக் கொண்டால் போவேன்’ என்று தெரிவித்தார்.