புக்கிட் குளுக்கோர், மே 25 – இன்று நடைபெற்ற புக்கிட் குளுக்கோர் இடைத்தேர்தலில், ஜசெக வேட்பாளரான ராம் கர்ப்பால் சிங் 41,242 வாக்குகள் பெற்று, அதிக அளவு பெரும்பான்மையில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்த வாக்களிப்பில் 89 சதவிகித வாக்குகளை ராம் கர்பால் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிசிஎம் கட்சி ஹுவான் செங் குவான் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முகம்மட் நபி பக்ஸ், அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸான் ஆகியோர் 10,000 ரிங்கிட் வைப்புத் தொகையை கூட திரும்பப் பெற முடியாத வகையில் படு தோல்வியை சந்தித்துள்ளனர்.
புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜசெக தலைவருமான கர்பால் சிங் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கார் விபத்தில் காலமானதையடுத்து, அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ வாக்குகள் விபரம் பின்வருமாறு:-
ஜசெக (ராம் கர்பால்) – 41,242
பிசிஎம் (Parti Cinta Malaysia) – 3,583
முகம்மட் நபி பக்ஸ் – 798
அபு பாக்கார் – 225