Home நாடு புக்கிட் குளுகோரில் நான்கு முனைப்போட்டி!

புக்கிட் குளுகோரில் நான்கு முனைப்போட்டி!

570
0
SHARE
Ad

bukitgelugorஜார்ஜ் டவுன், மே 12 – வரும் மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ள புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

ஜசெக சார்பாக மறைந்த கர்பால் சிங்கின் மகன் ராம் கர்பால் சிங் போட்டியிட அவருக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களாக  ஹுவான் செங்  குவான் , முகம்மட்  நபி  பக்ஸ்,  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

டேவான் ஸ்ரீ பினாங்கில் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் இவர்கள் நால்வரும் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

ஐந்தாவதாக வந்த சுயேட்சை வேட்பாளர் லிம் சீ கூன் (வயது 53) உரிய நேரத்தில் வைப்புத் தொகை செலுத்தாமல், 15 நிமிடம் தாமதமாக வந்ததால் மனுத்தாக்கல் செய்யும் தகுதியை இழந்தார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.