Home வாழ் நலம் புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!

2142
0
SHARE
Ad

Motherwortமே 26 – மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும்.

இளமை பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் பழக்கம் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும்.

இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள். புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

#TamilSchoolmychoice

நிறைய மது-புகை பழக்க ஒழிப்பு மையங்கள் நிக்கோடின் மாத்திரைகள், இ-சிகரெட்கள், பேட்ச் போன்ற பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவுகின்றன.

பல்வேறு மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் சற்றே பிரபலமில்லாத வழிமுறை ஒன்றும் உள்ளது. முழுவதும் இயற்கையானதாகவும் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் இருப்பதால், இந்த மூலிகை வைத்திய முறைகள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன.

 

mulikaiசெயின்ட் ஜான்ஸ் வோர்ட் (St. John’s wort) :

இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.

Lobeliaலோபெலியா (Lobelia):

இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

peppermintபெப்பர்மின்ட்/புதினா (Peppermint):

நிக்கோடினில் இருந்து விடுபடும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை உள்ளன. இந்நேரங்களில் பெப்பர்மின்ட் குமட்டலை குறைத்து, ஓய்வெடுக்க தூண்டும் காரணியாக சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மயக்கமூட்டவும் மற்றும் வலியை-குறைக்கவும் செய்யும் திறன் உள்ளது.