Home உலகம் சோமாலிய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 10 பேர் பலி! 

சோமாலிய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 10 பேர் பலி! 

524
0
SHARE
Ad

alshababமோகாதிஷு, மே 26 – சோமாலிய தலைநகர் மோகாதிஷுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் மீது அல்-ஷஹாப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தும், துப்பாக்கியால் சுட்டும் அங்கு உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

முதலில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், இதனை தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க சோமாலிய படை வீரர்களும் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.

இதனால் பாராளுமன்ற வளாகமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். 2 எம்.பி.க்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல்-ஷஹாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.