Home கலை உலகம் உடல் உறுப்புகளை தானம் செய்தார் நடிகை சோனா!

உடல் உறுப்புகளை தானம் செய்தார் நடிகை சோனா!

522
0
SHARE
Ad

Sonaசென்னை, மே 28  – மிருகம், குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை சோனா, அவ்வபோது ஏதாவது செய்து கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருவதை தவறாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பி.சரணுடனான நடந்த சில்மிஷ மோதலில் கோடம்பாக்கதையே ரணகளமாக்கிய சோனா, திடீரென்று தனது வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாகவும், அதில் பல உண்மைகலை உலகைற்கு சொல்லப் போவதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானம் செய்ய போகிறாராம். வரும் ஜூன் 1-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் சோனா, தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளாராம்.