Home கலை உலகம் பணத்தைத் திருப்பித் தரவில்லை என வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்! “பிரியாணி” படத்துக்கு...

பணத்தைத் திருப்பித் தரவில்லை என வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்! “பிரியாணி” படத்துக்கு மீண்டும் சிக்கல்!

719
0
SHARE
Ad

Vengat-Prabu-Sliderசென்னை, 14 டிசம்பர் – தென்னக சினிமா உலகின் பிரபல கவர்ச்சி நடிகை சோனா. ஏற்கனவே எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி.பி.சரண் தனக்கு காமத் தொல்லை கொடுத்தார் என சில மாதங்களுக்கு முன்னால் புகார் அளித்தவர் இவர்.

#TamilSchoolmychoice

இப்போது திடீரென வெங்கட்பிரபு, தன்னை பணமோசடிசெய்து விட்டார் என்று நடிகர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார் சோனா. அந்தபுகாரில் அவர் கூறியிருப்பதாவது:

வெங்கட் பிரபு கோவா படத்தை டைரக்ட்செய்து கொண்டிருந்போது எனக்கு ஒரு படம் டைரக்ட் செய்து தருமாறு கேட்டுஅவரை அணுகினேன். அதற்கு அவருக்கு சம்பளமாக பெரும் தொகை கொடுக்கப்பட்டது.ஆனால் வாக்குறுதிப்படி அவர் எனக்கு படம் பண்ணித்தரவில்லை. மூன்றுவருடங்களாக என் பணத்தை திருப்பிக்கேட்டும் அவர் இதுவரை தரவில்லை. இந்தநிலையில் அவர் டைரக்ட் செய்திருக்கும் படம் பிரியாணி வெளியாகப் போகின்றது. எனதுபணத்தை திருப்பி தந்த பிறகே படத்தை வெளியீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றுஅந்த புகாரில் சோனா தெரிவித்திருக்கிறார்.

இந்த புகார் மனுவை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இணையத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நீண்ட காலத்திற்குப் பின் வெளியாகப் போகும் “பிரியாணி” படம் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளியிடப்பட முடியாமல் முடங்கிப் போகும் நிலைமை ஏற்படலாம்.