Home கலை உலகம் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சூசனும் விவாகரத்து!

ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சூசனும் விவாகரத்து!

775
0
SHARE
Ad

Hrithik-Susanneமும்பாய்; டிசம்பர் 14 – பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது 13 ஆண்டு கால காதல் மனைவியான சூசனும் இல்லற வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

 அண்மையில் வெளிவந்து வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கிரிஷ் 3’ என்ற இந்திப் படத்தின் கதாநாயகனான ஹிருத்திக், நெடுங்காலமாக இந்திப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார்.

அவரது காதல் மனைவியான சூசன், பிரபல முன்னாள் நடிகரான சஞ்சய் கான் என்பவரின் புதல்வியாவார். ஹிருத்திக்-சூசன் இருவரின் காதல் திருமணம் டிசம்பர் 2000ஆம் ஆண்டில் நடைபெற்றது.

13ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் காதலர்களாக இருந்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களுக்குள் தங்களின் இல்லற வாழ்க்கை குறித்த கருத்து பேதங்கள் நிலவி வந்தன என்று பாலிவுட் ஊடகங்கள் அடிக்கடி தகவல்கள் வெளியிட்டு வந்தன.

அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சூசன் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் வேறு வீட்டில் தற்போது வசித்து வருகின்றார் என்றும் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹிருத்திக் ரோஷன் நேற்று தகவல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் தாங்கள் பிரிவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், தங்களின் அந்தரங்க விவகாரத்தை மக்களும்,

தகவல் ஊடகங்களும் மதிப்பளித்து, தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.