Home நாடு புதிய பேராக் சுல்தான் இன்று அறிவிக்கப்படுவார்!

புதிய பேராக் சுல்தான் இன்று அறிவிக்கப்படுவார்!

533
0
SHARE
Ad

sultan-azlan-shah-aug13_400_395_100ஈப்போ, மே 29 – நேற்று தனது 86வது வயதில், கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் காலமான பேராக் சுல்தான், அஸ்லான் ஷாவுக்கு பதிலாக புதிய சுல்தான் இன்று அறிவிக்கப்பட்டு, பதவியேற்பு வைபவமும் நடைபெறும்.

சுல்தான் அஸ்லான் ஷாவின் இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் புதிய சுல்தான் பாரம்பரியப்படி, கோலகங்சாரிலுள்ள இஸ்கண்டாரியா அரண்மனையில் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இஸ்தானா இஸ்கண்டாரியாவில் நடைபெறும் மாநில அரசவைக் குழுவினர் கூட்டத்தில் புதிய சுல்தான் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சுல்தான் ஒருவர் காலமானால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதிய சுல்தான் நியமிக்கப்பட வேண்டுமென பேராக் மாநிலத்தில் அரசியல் அமைப்பு சட்டவிதிகள் கூறுகின்றன.

இன்று மத்தியானம்,இஸ்லாமியர்களின் ‘அசார்’ தொழுகைக்குப் பின்னர் கோலகங்சாரிலுள்ள அரச மையத்துக் கொல்லையில் சுல்தான் அஸ்லான் ஷா நல்லடக்கம் செய்யப்படுவார்.