Home நாடு 11 கைதிகளுக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு வழங்கினார்!

11 கைதிகளுக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு வழங்கினார்!

671
0
SHARE
Ad

sultan-nazrinampunதாப்பா, ஜூன் 19 – கடந்த 2009-ம் ஆண்டு கோல கங்சாரில் சட்டத்திற்குப் புறம்பாக பேரணி நடத்திய குற்றத்திற்காகக் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இது குறித்துப் பேராக் பொதுமன்னிப்பு ஆணையத்தின் செயலாளர் டத்தோ ரஸாலி ஓத்மான் கூறுகையில், கோல கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்கண்டாரியாவில் சுல்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 10 மாதங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து அவர்கள் முறைப்படி மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஸாலி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தாப்பா சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர்களின் நன்னடத்தை குறித்து விசாரணை செய்த சுல்தான், அவர்கள் கூறிய பதிலைக் கேட்டுத் திருப்தியடைந்ததாகவும் அதனால் உடனடியாக பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டதாகவும் ரஸாலி தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு மற்றும் ரமலான் பண்டிகையை அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக நேற்று அவர்களின் பொதுமன்னிப்பு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் மலேசிய வரலாற்றில், சுல்தானிடம் பொதுமன்னிப்பு கேட்டு கோரிக்கை விடுத்து, அது சாத்தியமாகியுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.