Home இந்தியா நடுவானில் அனைத்துலக யோகா தினத்தைக் கொண்டாடும் ஏர் இந்தியா!

நடுவானில் அனைத்துலக யோகா தினத்தைக் கொண்டாடும் ஏர் இந்தியா!

453
0
SHARE
Ad

air-indiaபுதுடெல்லி, ஜூன் 19 – வரும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள முதல் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் யோகாவைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் நடுவானில் சிறப்பான முறையில் யோகா தினத்தைக் கொண்டாட உள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்;

“வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அந்த வாரம் முழுவதும் யோகாவைக் குறித்த திரைப்படம் இந்தியா முழுவதிலும் உள்ள ஏர் இந்தியா விமானத்தில் திரையிடப்படும்”.

#TamilSchoolmychoice

“இது தவிர, எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 21 ஆயிரம் பணியாளர்களுக்காக யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்துப் பணியாளர்களும் தினசரி யோகாவைப் பயிற்சி செய்து வந்தால் அவர்களின் வாழ்க்கை முறை உற்சாகமானதாக மாறும்”.

“யோகா தினத்திற்கான பிரதமர் மோடியின் ஆதரவையும், அவரது கூட்டு அழைப்பையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்” என ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.