Home நாடு பேராக் மாநிலத்தின் புதிய சுல்தான் ராஜா நஸ்ரின் ஷா!

பேராக் மாநிலத்தின் புதிய சுல்தான் ராஜா நஸ்ரின் ஷா!

738
0
SHARE
Ad

rajanazrinshah290514பேராக், மே 29 – பேராக் மாநிலத்தின் புதிய சுல்தானாக ராஜா நஸ்ரின் ஷா (வயது 58) அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 3.15 மணியளவில் வெளியானது.

நஸ்ரின் ஷா பேராக் மாநிலத்தின் 35 வது சுல்தான் ஆவார்.

பேராக் சுல்தான் அஸ்லான் ஷா  உடல்நலம் குன்றி நேற்று மதியம் 1.30 மணியளவில், தனது 86 வது வயதில் காலமானதைத் தொடர்ந்து, புதிய சுல்தானாக அவரது மகன் இளவரசர் நஸ்ரின் ஷா இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவரான நஸ்ரின் ஷா, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுகலைப்பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்துறையில் பிஎச்டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.