மே 31 – உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் இணையதளமான கூகுள், ஐரோப்பியர்களுக்காக ‘Right to be forgotten’ என்ற பெயரில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இணைய பக்கத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை தொடர்பு படுத்தக் கூடிய இணைப்புகளை, கூகுளின் தரவு தளங்களில் இருந்து அழிப்பதற்கு முறையிடலாம். அந்த இணைய பக்கத்தினை தொடார்ந்து கண்காணிக்கும் கூகுள், சாதகமான சூழ்நிலைகளில் அந்த விவரங்களை அழித்து விடும்.
சமீபத்தில் ஐரோப்பிய நீதிமன்றம், “பொருத்தமில்லாத மற்றும் காலாவதியான தனிநபர் தரவுகளுக்கான இணைப்புகளை அழிக்கச்சொல்லி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால், அவற்றை அழிக்க இணைய தேடல் நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று” என்று தீர்ப்பளித்து இருந்தது.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க கூகுள் இந்த புதிய வசதினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியினை கையாள்வதற்கும், ஆராய்வதற்கும் மூத்த அதிகாரிகள் கொண்ட புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறியுள்ளது.
இந்த புதிய வசதி குறித்து கூகுளின் தலைமை செயல் அதிகாரியான லார்ரி பேஜ் கூறுகையில், “ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை கூகுள் மதிகின்றது. எனினும் இப்படியான தீர்ப்புக்களால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் குறையும்” என்று கூறியுள்ளார்.