Home கலை உலகம் நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்!

நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்!

1099
0
SHARE
Ad

monikaசென்னை, மே 31 – யுவன்சங்கர் ராஜாவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் நடிகை மோனிகா. அழகி’, ‘பகவதி’, ‘சண்டக்கோழி’, ‘சிலந்தி’, ‘முத்துக்கு முத்தாக’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா.

இஸ்லாம் மதத்திற்கு மாறி தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார். இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில்,

monica“ஆன்மீக பற்று காரணமாகவே நான் இஸலாத்தை தழுவியுள்ளேன். காதல் என்று எதுவும் இல்லை. இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை 2010-ஆம் ஆண்டே நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன். ஆனால்  ஒப்புக் கொண்ட படங்கள் எல்லாம் முடிந்த பிறகு கூறலாம் என்று காத்திருந்தேன்.

#TamilSchoolmychoice

இப்போதுதான் எல்லா படத்தையும் முடித்தேன். இனி நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன். அதற்க்கு காரணமாக நீங்கள் தான். உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றார் நடிகை மோனிகா.