Home தொழில் நுட்பம் டுவிட்டர், ஆம்னிகாம் நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம்!

டுவிட்டர், ஆம்னிகாம் நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம்!

530
0
SHARE
Ad

imagesமே 31 – டுவிட்டர் நிறுவனம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளம்பர நிறுவனமான ஆம்னிகாம் நிறுவனத்துடன், 230 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, இரண்டு வருட கால வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது..

இந்த ஒப்பந்தத்தின் படி டுவிட்டரின் விளம்பரங்களுக்கான Mopub பிரிவும், ஆம்னிகாம் நிறுவனத்தின் Accuen பிரிவும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கின்றன.    

டுவிட்டரின் விளம்பரப் பிரிவுடனான இந்த கூட்டு வர்த்தகம், ஆம்னிகாமின் விளம்பரப் பிரிவின் மீது ஒரு புதிய பார்வையினை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.  

இது பற்றி டுவிட்டர் நிறுவனத்தின் வருவாய் பிரிவின் தலைவர் ஆடம் பெயின் கூறுகையில், “செல்பேசிகளின் வழியாக விளம்பரப் பரிமாற்றம் செய்வதற்காக, ஒரு துணை நிறுவனத்துடன் போடப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவே” என்று குறிப்பிட்டுள்ளார்.